actor arjun released in sruthi hariharan meeto case

Advertisment

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மீ டூ இயக்கத்தில் நடிகை ஸ்ருதிஹரிஹரன் புகார் அளித்திருந்தார். தமிழில் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் அர்ஜுன், ஸ்ருதிஹரிஹரன் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று மீ டூ இயக்கத்தில் புகார் அளித்திருந்தார். இது தென்னிந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.அதன் பிறகு நடிகர் அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுத்த அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5eb166ac-931e-4e69-9df2-2c2d928fd9b4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_2.jpg" />

Advertisment

இதையடுத்து, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் மீது மூன்றாண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணையின் இறுதி அறிக்கையை நேற்று (29.11.2021) கப்பன் பார்க் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.